பொங்கல் பரிசு வழங்கும் பணி நிறுத்தம் !

புதுக்கோட்டை நியாய விலைக்கடைகளில் துணிப்பை பற்றாக்குறையால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
x
புதுக்கோட்டை நியாய விலைக்கடைகளில் துணிப்பை பற்றாக்குறையால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 21 பொருட்களையும் வழங்க தமிழக அரசு சார்பில் துணிப் பை ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் 4 லட்சத்து 28 ஆயிரம் ரேஷன் தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், அரசால் வழங்கப்படும் துணிப்பை இல்லை என்று கூறி, மாவட்டத்திலுள்ள பல ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பல கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களை தங்கள் வீடுகளில் இருந்து பைகளை எடுத்து வந்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்