பதக்கங்கள் வென்ற மாணவிகள்..பட்டாசு வெடித்து வரவேற்ற கிராமம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வெளிமாநிலங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வென்று பதக்கங்களுடன் ஊர் திரும்பிய மாணவிகளை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
பதக்கங்கள் வென்ற மாணவிகள்..பட்டாசு வெடித்து வரவேற்ற கிராமம்
x
வடமலை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வ ரெபிக்ஷா, மற்றும் ஞான செல்வி ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் உத்தரகாண்டில் நடைபெற்ற, தேசிய அளவிலான சப் ஜூனியர் நேஷனல் கபடி போட்டியில் விளையாட தமிழக அணியில் இடம் பிடித்தனர். இதில் செல்வ ரெபிஷா அணித் தலைவராக செயல்பட்ட நிலையில், அப்போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். முதன் முறையாக இப்போட்டியில் தமிழக அணி பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது. பாரதி அகடமியில் இருவரும் கபடி பயின்ற நிலையில், அதே அகடமியில் பயின்ற மேலும் 16 மாணவிகள் பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான ராயல் பிரீமியர் கபடி போட்டிக்கு இரு அணிகளாக தேர்வாகி சென்ற நிலையில், 2 அணிகளும் முதல் 2 இடங்களைத் தட்டிச் சென்றனர். பீகார் மற்றும் உத்தரகாண்ட் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் வந்த மாணவிகளை, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். வெளி மாநிலங்களுக்கு சென்று வெற்றி தேடி வந்தாலும், முறையாக பயிற்சி பெற மைதானமோ விளையாட்டு உபகரணங்களோ இல்லாத நிலையில், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்