"இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு"

சென்னை கொரட்டூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வடியாத மழை நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
சென்னை கொரட்டூர் மத்திய நிழற்சாலையில் சுமார் 
40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.  இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படும்  அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தண்ணீர் வடியாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மழைநீரை அகற்ற கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து , மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்