போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : "விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் குறித்த விசாரணையை முடித்து, வரும் 31-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் பாலமுருகன் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்க கோரி, பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றார்.

போலீஸார் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞர் ஹென்றிடிபேன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனடிப்படையில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஜ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணாஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குத் தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்