எம்ஜிஆர் புகழை மறைப்பதற்காகவா அம்மா உணவகம்? - ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டி ஓ.பன்னீர்செல்வம் , ஒரு விரலை உயர்த்தி சுட்டிக்காட்டும் நேரத்தில், மற்ற மூன்று விரல்கள் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டி ஓ.பன்னீர்செல்வம் , ஒரு விரலை உயர்த்தி சுட்டிக்காட்டும் நேரத்தில், மற்ற மூன்று விரல்கள் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக ஓ.பன்னீர்செல்வம் போன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தங்கள்மீது உள்ள அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளிவர தொடங்கியுள்ள காரணத்தால், அதனை திசைத்திருப்பும் நோக்கோடு,  தி.மு.க.மீதும், ஆட்சிமீதும் சேற்றை வாரி இறைப்பதைப் போல அறிக்கை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார். "அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்வதற்காக கலைஞர் உணவகங்கள்' அறிவிக்கப்படுகிறது"" என்று ஓ.பி.எஸ் சொல்வது அர்த்தமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். சத்துணவுக் கூடம்' என்று ஒரு திட்டம் இருந்தபோதே, 'அம்மா உணவகம்'  கொண்டு வந்தது, எம்.ஜி.ஆர். புகழை மறைப்பதற்காகவா? என்பதை ஓ.பி.எஸ். விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எம்.ஜி.ஆர்.சத்துணவுக் கூடம் இருக்கும்போதே,  அம்மா உணவகம் எப்படி தொடங்கப்பட்டதோ, அதைப்போலத்தான் 'கலைஞர் உணவகம்' என்றும், அம்மா உணவகத்தின் நீட்சியே கலைஞர் உணவகம் என்று, ஆர்.எஸ்.பாராதி விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்