சென்னை தடுப்பூசி செலுத்தியவர்களின் நிலவரம்

சென்னை மாநகரில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்தது.
சென்னை தடுப்பூசி செலுத்தியவர்களின் நிலவரம்
x
சென்னை மாநகரில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்தது. 

சென்னையில் 54 சதவீதம் பேர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகரில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்மொத்தம் 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர்.

அதில் 82 சதவீதம் பேர் , அதாவது 45 லட்சத்து 45 ஆயிரத்து 826 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரை 54 சதவீதம் பேர், அதாவது முப்பது லட்சத்து 786 பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் இதுவரை 12 சதவீதம் பேர் ஓரு தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. 28 சதவீதம் பேர் முதல் தவணை செலுத்திவிட்டு, இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாமல் உள்ளது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்