வடகிழக்கு பருவமழை பாதிப்புகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண உதவி குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு
x
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண உதவி குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண உதவி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, முழுமையாக சேதமடைந்த குறுவை - கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

நீரில் மூழ்கி சேதமடைந்த சம்பா பயிர்களை மறு சாகுபடி செய்ய, ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசு, மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், 
வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்