அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் - மாணவர்கள் உடன் கலந்துரையாடியாடினார்

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
x
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் செல்லும் போது, பயண வழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற முதல்வர் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, கல்வியில் கவனம் செலுத்துவதோடு, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், அங்கு மதிய உணவு சமைக்கும் இடத்திற்கு சென்ற முதல்வர் உணவுப் பட்டியலில் உள்ளது போல் உணவு தயாரிப்பு நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்