"9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30ஆம் தேதி வரை, மேற்கண்ட மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 31ஆம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story
