20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் 3-வது பெரிய ஏரி - விவசாயிகள் கோரிக்கை

20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் 3-வது பெரிய ஏரிக்கு காவிரி நீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
x
20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் 3-வது பெரிய ஏரிக்கு காவிரி நீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்... 

சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து வறண்டு காட்சியளிக்கும் இந்த ஏரி, தமிழகத்தின் 3-வது மிகப்பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரியாகும். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரிக்கு கடவூர் மலைப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர்தான் நீராதாரமாகும். 

2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி, 198.8 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் திறன் கொண்டது. 

கடந்த 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட ஏரி, போதிய மழை இல்லாததாலும், வரத்து கால்வாய்கள் அடைப்பட்டதாலும் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது.

இதனால் பெரும் வேதனையடைந்துள்ள விவசாயிகள், 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி நீரை கொண்டுவர முடியாதா என ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

அழகப்பன், கரட்டுப்பட்டி விவசாயி 

"தேர்தல் வந்தால் மட்டும் ஏரி பற்றி பேசுகிறார்கள்"
"16 கி.மீட்டர் தொலைவில் காவிரி ஆறு ஓடுகிறது"
"மாயனூரிலிருந்து நீரை கொண்டுவர நடவடிக்கை"

ஏரி நிரம்பினால் 150-க்கும் அதிகமான கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதிபெறும் எனக் கூறும் விவசாயிகள், காவிரி நீரை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள்.

அழகப்பன், கரட்டுப்பட்டி விவசாயி 

"காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம்..."
"பஞ்சப்பட்டி ஏரிக்கு நீரை கொண்டுவர வேண்டும்"
"மோட்டார் மூலம் காவிரி நீரை கொண்டுவர வேண்டும்"

தங்களது தாகம் தணிக்கவும், விவசாயம் செழிக்கவும் கடலில் கலக்கும் காவிரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள் பஞ்சப்பட்டி ஏரி தங்கள் பஞ்சத்தை போக்குமா...? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்