சமூக நீதி கண்காணிப்புக் குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் "சமூகநீதிக் கண்காணிப்புக் குழு'' அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை அமைத்து, அதன் தலைவராக பேராசிரியர் சுப. வீரபாண்டியனை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முனைவர் கே. தனவேல்,
பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோரையும் உறுப்பினர்களாக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்யும் என, முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் உறுப்பினர்-செயலராக அங்கம் வகிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story