9 மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு தலைவர் பதவி - நாளை மறைமுக தேர்தல்

9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி குழு துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
9 மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு தலைவர் பதவி - நாளை மறைமுக தேர்தல்
x
9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி குழு துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

துணைத்தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 

9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கும் துணை தலைவர் பதவிக்கும், தலா 74 ஒன்றிய குழுத் தலைவர், ஒன்றிய குழுத் துணை தலைவர்  பதவிக்கும்,
2 ஆயிரத்து 901 கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் போட்டியின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் பதவியேற்ற உறுப்பினர்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சரிசமமாக வாக்குகள் கிடைத்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனார்.


Next Story

மேலும் செய்திகள்