தமிழகத்தில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.
x
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 88 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது.    

கொரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது.   

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 14 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து கோவையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 88 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  Next Story

மேலும் செய்திகள்