ஒரு யானையை கண்காணிக்க 30 பேர் - இவ்வளவு பாதுகாப்பு வழங்க காரணம் என்ன ?

மூன்று கும்கி யானைகளுடன், 30 வனத்துறையினரின் கண்காணிப்பில் ராஜ தோரணையில் வலம் வருகிறது, ரிவால்டோ யானை... ஒரு யானைக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்க என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
x
மூன்று கும்கி யானைகளுடன், 30 வனத்துறையினரின் கண்காணிப்பில் ராஜ தோரணையில் வலம் வருகிறது, ரிவால்டோ யானை... ஒரு யானைக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்க என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

இதோ நாம் காணும் இந்த காட்டு யானையின் பெயர்  ரிவால்டோ... இந்த யானை குளிப்பது முதல் உணவு உண்பது, உறங்குவது வரை கண்காணிக்கும் பணியில், 4 ஷிப்ட் முறையில் 30 பேர் கொண்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இடது கண் பார்வை இழந்த நிலையில், தும்பிக்கையில் காயத்தோடு, கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் வசிக்கும் பகுதியில் வலம் வந்த இந்த யானையை மீட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் உள்ளனர், நீலகிரி மாவட்ட வனத்துறையினர்...

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளில் வலம் வந்த இந்த யானையை முதலில் கூண்டில் அடைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. 

இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, யானையை 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர், 
வனத்துறையினர்...

ஆனால் 24 மணி நேரத்தில் மீண்டும் தான் வாழ்ந்து, வலம் வந்த பகுதியை வந்து சேர்ந்து அதிர்ச்சியளித்தது, ரிவால்டோ யானை. 

இதையடுத்து, மக்கள் நடமாடும் பகுதிக்கு யானை செல்வதை தடுக்க சுழற்சி முறையில் ஒரு ஷிப்டுக்கு 5 பேர் வீதம் அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் யானையை பின்தொடர்ந்து வருகின்றனர், வனத்துறையினர். 


Next Story

மேலும் செய்திகள்