"ஆதி திராவிடர் நல பள்ளிகள் மேம்படுத்தப்படும்" -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும்
x
"ஆதி திராவிடர் நல பள்ளிகள் மேம்படுத்தப்படும்"  -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

ஆயிரம்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அப்போது, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்டப்படும் என்று அவர் அறிவித்தார்.39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வு கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் 201 கோடியே13 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாய கூடங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 23 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடி யினருக்கு 13 கோடியே 29 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு 4 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றும் 31 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கும் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும் எனவும்  அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  கூறினார்.512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 46 லட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான்கள் வழங்கப்படும் என்றும் 51 ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களுக்கு 87 லட்சம் ரூபாய் செலவில் இன்வெட்டர் வழங்கப்படும் எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது.5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த தொழில் முனைவோருக்கு தொழில் மேலாண்மை பயிற்சிகள் 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் 5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை வேளாண் பயிற்சிகள் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் எனவும் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.மேலும் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய மின் மோட்டார் வாங்க தலா 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் உள்ளிட்ட புதிய 23 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்