எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர் கோவிந்தசாமி,  மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்தது அதிமுக தான் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியை பெற்றதோடு சரி, ஒரு போர்டு கூட வைக்கவில்லை என குற்றம்சாட்டினார். அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை எனவும் பதிலளித்தார். மேலும் திமுக ஆட்சியமைத்த பிறகு தொடர் அழுத்தம் காரணமாக, கடந்த மாதம் 3 ஆம் தேதி குழு அமைக்கப்பட்டு மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு நடைபெற்றிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்