"நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்" - சட்டப்பேரவையில் தகவல்

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும்சிறு குறு நடுத்தர தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது , அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார் அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு  புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது, இது மருத்துவக்கல்வி செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பை உறுதி செய்யும் என கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

அனைத்திந்திய தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.

தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தற்போது ஒன்றிய அரசு அனைத்து இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த நிதியாண்டு முதல் இளநிலை முதுநிலை பல் மருத்துவர் சேர்க்கைக்கு பின்பற்ற முடிவு செய்துள்ளது மாநில அரசால் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை அகில இந்திய தொகுப்பிற்கு மாநில அரசால் அளிக்கப்படும் இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்