"1 லட்சம் வீடுகளில் குடியேற்ற நடவடிக்கை" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

அடுத்த 6 மாதங்களில் ஏழை எளிய மக்கள் ஒரு லட்சம் வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
x
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய  பேசிய அத்துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கடந்த நான்கு ஆண்டுகளில் 61 திட்டங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 20 ஆயிரத்து 506 வீடுகள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.பல இடங்களில் கட்டப்பட்டுள்ள இத்தகைய குடியிருப்புகள்  மக்கள் பணி புரியும் இடத்திற்கும் வெகு தொலைவில் இருப்பதால் அங்கு குடியேற பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை, தேனி, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மூலமாக விளம்பரப்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் காலியாக உள்ள வீடுகளில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.குடிசை மாற்று வாரிய கட்டடத்தை கட்ட ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தகாரர் அந்த கட்டடத்தை வடிவமைக்க கூடிய பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப்படும் எனவும் இனிமேல் கட்டப்பட கூடிய வீடுகள் 50 ஆண்டுகாலம் உறுதியாக இருக்கக்கூடிய வகையில் தரமாக கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்தார்.அடுத்த 6 மாதத்தில் 80 ஆயிரம் வீடுகள் தயாராகி விடும் எனவும் மொத்தம் ஒரு லட்சம் வீடுகளில் அடுத்த 6 மாதத்தில் ஏழை எளிய மக்கள் குடிஅமர்த்தப் படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.சிதிலமடைந்த 7 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள் நடப்பு நிதி ஆண்டில் 1200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் எனவும்
மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கான முழுத் தொகை செலுத்திய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தா.மோ.அன்பரசன்  தெரிவித்தார்.
மேலும் வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழு தொகை செலுத்திய 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்