மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு, தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாராலிம்பிக்கில் அடுத்தடுத்து 2 பதக்கங்களை வென்ற தமிழகத்தின் தடகள தங்க மகனின் சாதனை பயணம் தொடர வாழ்த்துகள் என்றும், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடி தந்திருக்கும் அவரை தமிழக மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல் நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவரது சாதனைப் பயணம் தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்