மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு ரூபாய் வரி; திரும்ப வருவது வெறும் 35 பைசா மட்டுமே - நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

எந்த கருணை அடிப்படையிலும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு அதிகமாக நிதி ஒதுக்கவில்லை என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்துள்ளார்
மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு ரூபாய் வரி; திரும்ப வருவது வெறும் 35 பைசா மட்டுமே - நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
x
எந்த கருணை அடிப்படையிலும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு அதிகமாக நிதி ஒதுக்கவில்லை என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்துள்ளார் 

வருவாய்த் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய ராணுவ தளவாட சாலையாலும், ராணுவ தளவாட கண்காட்சியாலும் தமிழக அரசுக்கு 2000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக பேரவையில் கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன்,  தமிழகத்தைப் பொறுத்தவரை வரியாக மத்திய அரசு  ஒன்பது புள்ளி​ ஒரு சதவிகிதத்தை தருகிறது என்றார். ஆனால் மாநில அரசுக்கு  திரும்பி வரும் பங்கு நான்கு புள்ளி ஒரு சதவிகிதம் மட்டுமே என குறிப்பிட்டார். 
தமிழக அரசு ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு தந்தால் திரும்பி வருவது 35 அல்லது 45 பைசா தான் என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்