குட்டி பள்ளியை உருவாக்கிய கிராமம் - மாணவர்களுக்காக ஸ்பெஷல் வகுப்பறை!

மாணவர்கள் நலனுக்காக குட்டி பள்ளியையே நடத்தி வருகிறது ஒரு கிராமம்...
x
மாணவர்கள் நலனுக்காக குட்டி பள்ளியையே நடத்தி வருகிறது ஒரு கிராமம்...  

கொரோனா தொற்று பரவலால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படாமல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன..

இந்த சூழலில் வீடுகளில் முடங்கியிருக்கும் மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்று சூழலை உருவாக்கி கொடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் சேரன்மா நகர் பகுதி மக்கள்...

பொதுமக்கள் ஒன்றிணைந்து வகுப்பறை போன்று ஒரு செட்டப்பை உருவாக்கி, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ரோசி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்

வெறும் பாடம் கற்றுக்கொடுப்பதோடு நிறுத்தாமல், தனியார் பள்ளி ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு உடற்கல்வி சார்ந்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது

ஆன்லைன் வகுப்புகள் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுவதாகவும், இங்கு சுகாதார வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்

என்னதான் பள்ளி போன்று செட் அமைத்தாலும், பள்ளி எப்போது திறப்பார்கள் என்ற ஆர்வமே இருப்பதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கூறுகின்றனர்

சேரன்மா நகர் பகுதி மக்களின் முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும் மற்ற இடங்களில் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது அரசு விதித்துள்ள சுகாதார கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்