வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா - கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா - கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது திருவிழா
x
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், முதல் நாள் திருவிழா, பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது. முன்னதாக கொடியானது பேராலயத்தை சுற்றி உள்ளூர் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கொடிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். அதனை  தொடர்ந்து கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7 ஆம் தேதியும் சிறப்பு திருப்பலி செப்டம்பர் 8 ஆம் தேதியும்  நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்