தேசிய அளவிலான மல்யுத்த போட்டி - 22 மாநில வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் வீரர், வீராங்கனைகள் அதிரடி காட்டி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் வீரர், வீராங்கனைகள் அதிரடி காட்டி வருகின்றனர்.
தேசிய அளவிலான மல்யுத்த முதல் சாம்பியன் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதனை, தேசிய மல்யுத்த கழக தலைவரும், எம்.பி.யுமான புரு பூஷன் ஷரன் சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 22 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் போட்டியின், இறுதி விழாவில் சாம்பியன் கோப்பை, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதிரடியாக நடைபெற்று வரும் இந்த மல்யுத்த போட்டியினை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
Next Story