சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றும் சாலை, பாலம் பணி குறித்த விவரம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றும் சாலைகள், மேம்பாலங்கள் பணி குறித்து கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பார்ப்போம்.........
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றும் சாலை, பாலம் பணி குறித்த விவரம்
x
 2021-22ம் ஆண்டில் மேடவாக்கம், வேளச்சேரி மேம்பாலப் பணிகள் ரூ. 203 கோடி 21 லட்சம் மதிப்பிலும்,கோயம்பேடு சாலை மேம்பால பணிகள் 93 கோடி 50 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவான்மியூர் சந்திப்பில் உள்ள சாலை மேம்பால பணிக்கு 219 கோடியே 92 லட்சம் மதிப்பில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, 58 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 சாலை மேம்பால பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளதாகவும், இவற்றில் 13 சாலை மேம்பால பணிகளுக்கு ஆயிரத்து 100 கோடியே 7 லட்சம் மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணி நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே  பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு ஆற்றுப்பால பணிகள் 77 கோடியே 1 லட்சம் மதிப்பிலும், நொலம்பூர் கூவம் ஆற்றின் குறுக்கே ஆற்றுப் பாலம் அமைக்க 36 கோடி மதிப்பில் நில எடுப்பு பணியும், பாடிக்குப்பத்தில் கூவம் ஆற்றுன் குறுக்கே ஆற்றுப் பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்