பள்ளிகள் திறப்பு- வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் எனவும் ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் மட்டும் அமர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு- வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
x
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் எனவும் ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பிற ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்,ஒவ்வொரு பள்ளியிலும் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது .நேரடி முறையில் வகுப்புகள் நடந்தாலும் ஆன்லைன் வழியிலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் எனவும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லையென்றும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.பள்ளிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற கூடாது எனவும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும்  குழு விவாதங்களுக்கும் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் கூட்டாக அமர்ந்து  உணவுகளை பகிர்ந்து சாப்பிடக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சாப்பிடும்போதும், இடைவேளையின் போதும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்