சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் - லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை அறிக்கை

சசிகலா சிறையில் இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக பெங்களூரு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
x
சசிகலா சிறையில் இருந்தபோது இரண்டு கோடி ரூபாய் வரை லஞ்சப்பணம் கை மாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை அறிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில், யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது, அவர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்