ரேஷன் பொருள் கடத்தல், பதுக்கல் - கடும் நடவடிக்கை

ரேஷன் பொருள் கடத்துவோர் மற்றும் பதுக்குவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருள் கடத்தல், பதுக்கல் - கடும் நடவடிக்கை
x
ரேஷன் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக இரண்டாயிரத்து 144 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த, 3 மாதங்களில், அரிசி கடத்தல் தொடர்பாக ஆயிரத்து 918 வழக்கு, 66 மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கு, சமையல் எரிவாயுவை வர்த்தகத்துக்கு பயன்படுத்தியதாக,109 வழக்குகளும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளால் 2 கோடியே 2 லட்சம் ரூபாய் அளவிலான, ஆயிரத்து 255 மெட்ரிக் டன் அரிசியும், 7 ஆயிரத்து 673 லிட்டர் மண்ணெண்ணெயும் பிடிபட்டுள்ளது என அறிக்கையில் உள்ளது.கடத்தலுக்கு பயன்படுத்திய 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 27 பேரை தடுப்பு காவலில் கைது செய்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்