"சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
x
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழகத்தின் வனப்பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பறவைகள், புலிகள் சரணாலயங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும், நீர், நிலம், காற்று மாசுபடுதலைத் தடுப்பது தொடர்பாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்