ஆவின் முறைகேடு புகார் எதிரொலி - 34 உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
x
ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆவின் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் நிறுவனங்களில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்களாக இருந்த ரமேஷ் குமார், புகழேந்தி, முத்துக்குமரன், அன்பு மணி, வசந்த் குமார், செல்வம், முருகன், செம்பருத்தி உள்ளிட்ட 34 முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி பிறப்பித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்