விவசாய பட்டியலில் தேனீ வளர்ப்பு - ஆர்வம் காட்டும் புறநகர் விவசாயிகள்

கோவை மாவட்டம் சூலூரில் ஊரடங்கு காரணமாக தேனீ வளர்ப்பில், இளைஞர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அதிக அளவு லாபம் தருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
x
கோவை மாவட்டம் சூலூரில் ஊரடங்கு காரணமாக தேனீ வளர்ப்பில், இளைஞர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அதிக அளவு லாபம் தருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்ட புறநகர் பகுதியான சூலூரில் அதிக விளை நிலங்கள் உள்ளன. தென்னை, வாழை விவசாயிகள் பாதிப்படையும் நிலையில், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பாக தேனீக்கள் வளர்ப்பு குறித்து சூலூர் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில்,  வேலையிழந்த பட்டதாரி இளைஞர்கள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னை, வாழை, காய்கறி மற்றும் பூந்தோட்டம் நடுவே, தேனீ வளர்த்தால், அதிக அளவில் தேன் கிடைப்பதுடன், அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிர்களிலும் மகசூல் கூடும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. 15க்கும் மேறபட்ட விவசாயிகள் இந்தப் பயிற்சியை பெற்று வருகின்றனர். அதிக லாபம் தரும் தேனுடன் மெழுகும் கிடைப்பதால், கூடுதல் லாபம் என்கின்றனர் விவசாயிகள்.


Next Story

மேலும் செய்திகள்