2.5 லட்சம் தடுப்பூசி வழங்கிய மத்திய அரசு; "அனைத்து தடுப்பூசி மையங்களும் செயல்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி பணி செலுத்தும் பணி வழக்கம் போல் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி பணி செலுத்தும் பணி வழக்கம் போல் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைந்த‌தால் பெரும்பாலான இடங்கள் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்த‌து. இதன்மூலம் தமிழகத்தின் கையிருப்பு 3 லட்சத்தை தாண்டி உள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்