கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - யு.ஜி.சி.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ப்ளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும்
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - யு.ஜி.சி.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
ப்ளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு பின்னர், கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை  தொடங்குவது  குறித்து விளக்கமளிக்க பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.இதை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.சராசரி மாணவர்கள், அரசின் இந்த முடிவை வரவேற்கலாம் எனவும், நன்றாக படிக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமையை நிரூபிக்க, தேர்வு எழுதவே விரும்புவர் என்றும் அவர்களுக்காக பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்த வேண்டும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். 2  மாதங்களுக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ப்ளஸ் 2 தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இதுசம்பந்தமாக  விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்