"தடுப்பூசி ஓதுக்கீட்டை உயர்த்த வேண்டும்" - ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x
தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக நடத்தி வருவதால், ஜூன் மாதத்தில் அதன் தேவை 
3 மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீடு முறையே 75 சதவீதம் மற்றும் 25 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள அவர், தமிழகத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ஒரு கோடியே 43 லட்சம் தடுப்பூசியில் தனியார் மருத்துவமனைகளில் ஆறரை லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இதன் மூலம் அதன் பயன்பாடு வெறும் 4.5 சதவீதமாக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளிடம் 7 லட்சம் முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் வெறும் 2 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்எனவே, மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி  ஒதுக்கீடு 75 சதவீதமாக இருப்பதை 90 சதவீதமாகவும்,  தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி  ஒதுக்கீடு 25 சதவீதம் என்பதை, 10 சதவீதமாகவும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்