கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
x
கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு வெளி நாடுகளில் இருந்து, சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த விமானங்களில் வரும் பயணிகள் மூலம் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி  வரும் சிறப்பு விமானங்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.6 பயணிகளை தனியே அழைத்து சோதித்த போது, அவர்களிடம் மூன்றரை  கோடி ரூபாய் மதிப்புள்ள, ஏழரை  கிலோ கிராம்  தங்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து 6 பேரிடமும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்