குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.
x
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.   


குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர்.  வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.லேசான அறிகுறி உள்ள குழந்தைகனை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், இணைய தள மூலம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று இருக்கும். அவ்வாறு அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல், சளி, இருமல் உடல் தொண்டை எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறி குழந்தைகளுக்கு ஏற்படும் என்றும்,குழந்தைகளுக்கு ஏற்படும் 'மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்' அல்லது எம்.ஐ.எஸ் - சி தொடர்பாகவும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அறிகுறி இருந்து நெகடிவ் வந்தாலும் எம்.ஐ.எஸ் - சி  சோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.எம்.ஐ.எஸ்- சி என்பது 0-18 வயதினருக்கு  3 நாட்கள் வரை காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சுவாச கோளாறுகள், கொரோனா அறிகுறிகள் தென்படுவது என்றும்,எம்.ஐ.எஸ் - சி பரிசோதனை செய்வதற்கு முன் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதா என்ற பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தினசரி 6 மணி நேரத்திற்கு ஒருமுறை என 4 வேளை, குழந்தைகள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும்,சி.டி. ஸ்கேன் எடுக்க கூடாது என்றும், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் கட்டயாம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும், 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள், உடல் நிலை அடிப்படையில் முக கவசம் அணியலாம் என்றும், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள்  மற்றவர்களை போல் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஸ்டீராய்டு மற்றும் ரெம்டெசிவர் மருந்து அளிக்க கூடாது என்றும், அவ்வாறு கொடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என சுட்டிக்காட்டி உள்ளது.தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டீராய்டு கொடுக்கலாம் என்றும்,டெக்சாமேத்தாசோன் 0.15மில்லிகிராம் அதிகபட்சமாக 6 மில்லிகிராமும், மீத்தைல் ப்ரீடெனிசோலோன் 0.75 மில்லிகிராமில்   அதிகபட்சமாக 30 மில்லிகிராம் நாள் ஒன்றுக்கு கொடுக்கலாம் என அதில் இடம்பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்