முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து - கிஷோர் கே சாமி கைது

முதலமைச்சர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர்.
x
முதலமைச்சர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர். 

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் கிஷோர் கே சாமி தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கிஷோர் கே சாமி மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, பம்மல் பகுதியில் வசித்து வந்த கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அனு பிரியாவின் மாதவரம் வீட்டில் அந்த நபரை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுக்கு இணங்க சைதாப்பேட்டை கிளைச்சிறையில் நீதிமன்ற காவலில் கிஷோர் கே சாமி அடைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்