"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..
x
தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

அதன்படி கடையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், தினமும், இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மது வாங்க வரும் நபர்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் வரைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும், ஒரே நபருக்கு அதிகளவில் மதுபானம் வழங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முககவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்