சென்னைக்கு வந்த 99,420 டோஸ் தடுப்பு மருந்து.. மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்க திட்டம்

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 99 ஆயிரத்து 420 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன
x
சென்னைக்கு வந்த 99,420 டோஸ் தடுப்பு மருந்து.. மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்க திட்டம் 

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 99 ஆயிரத்து 420 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன.ஐதரபாத்தில் இருந்து சென்னை 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்தன. தமிழக அரசு நேரடியாக இந்த மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இவை தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 14 ஆயிரத்து 420 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து இந்த தடுப்பூசிகள் பெரிய மேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் பிரித்து அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Next Story

மேலும் செய்திகள்