பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரம் - பிஎஸ்பிபி முதல்வர், நிர்வாகி வாக்குமூலம்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
x
பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரா உள்ளிட்டோரிடம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவி யாரென்று தங்களுக்கு தெரியாது என அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் பாலியல் புகார் கமிட்டியில் இருந்தது கைதான ராஜகோபாலன் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஜராக இருவரிடமும் தனித்தனியாகவும், பின்னர் சேர்ந்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அவர்கள் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. Next Story

மேலும் செய்திகள்