நடிகை சாந்தினி புகார் அளித்த விவகாரம் - மணிகண்டனின் உதவியாளர், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆஜர்

நடிகை சாந்தினி புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
x
நடிகை சாந்தினி புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கவுரீஸ்வரன் மற்றும் உதவியாளர் சரவண பாண்டி ஆகியோர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து 2 பேரும் இன்று ஆஜரான நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்