பணத்திற்காக கடலூரில் நடந்த பயங்கரம் - நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்

கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
பணத்திற்காக கடலூரில் நடந்த பயங்கரம் - நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்
x
கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ஜெயமணி. 31 வயதான இவருக்கு 21 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. 

2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் மனைவி மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெயமணி, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

அப்படி மது அருந்தும் போது ஜெயமணியின் மனைவி மீதான விருப்பத்தை பகிர்ந்துள்ளார் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. இதற்காக பணம் தருவதாக அவர் கூறியதை கேட்ட ஜெயமணி, மனைவி அதிலும் கர்ப்பிணியான மனைவி என்றும் பார்க்காமல் சத்து மாத்திரை என கூறி மயக்க மாத்திரையை மனைவிக்கு கொடுத்துள்ளார். 

இதில் அவர் மயக்கமடையவே, தன் நண்பனை வீட்டிற்கு வரவைத்து அவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறார் அந்த கொடூர மனம் படைத்த கணவன். இதேபோல் மற்றொரு நண்பரான மணிகண்டன் என்பவரையும் வீட்டுக்கு வரவைத்து நண்பரோடு இணக்கமாக இருக்குமாறு கூறவே பதறிப்போனார் அந்த  பெண்... தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் நண்பர்களை வீட்டுக்கு வரவைத்து மீண்டும் மீண்டும் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். 

பின்னர் தற்கொலை மிரட்டலை கையில் எடுத்து மனைவியை பிளாக் மெயில் செய்த அவர், அடிக்கடி நண்பர்களுக்கு தன் மனைவியை விருந்தாக்கி உள்ளார். இணங்காவிட்டால் மயக்க மாத்திரை கொடுத்ததை போலவே மீண்டும் செய்வேன் என கூறி இருக்கிறார் ஜெயமணி. 

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மனைவி தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று தனக்கு நடந்ததை எல்லாம் கூறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் ஜெயமணி, அவரின் நண்பர்களான சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்