"பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும்" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
x
தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். வேலூர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். வரும் 18ம் தேதி, குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், அணையின் நீர்வரத்து கால்வாயில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பாலாற்றில் ஆய்வுகள் முடிந்த பின்பு, தண்ணீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணை கட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்