பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் - காரை இயக்கிய பெண் ஓட்டுனர் மகிழ்ச்சி

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேட்டரி கார் இயக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பெண் ஓட்டுநர் கவிதா தெரிவித்துள்ளார்.
x
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டரி கார் மூலம் சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அந்த பேட்டரி காரை கவிதா என்ற பெண் ஊழியர் ஓட்டி சென்றார்.  இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேட்டரி கார் இயக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பெண் ஓட்டுநர் கவிதா தெரிவித்தார். உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தால் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கவிதா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்