திருமண கோலத்தில் ஆதரவற்றோருக்கு உதவி.. விஜய் ரசிகர்களான புதுமண தம்பதிக்கு பாராட்டு

திருமணம் நடந்த கையோடு சாலையோரத்தில் வசிக்கும் குடும்பங்கள், ஆதரவற்றோருக்கு விஜய் ரசிகர்களான புதுமண தம்பதி, நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
x
திருமண கோலத்தில் ஆதரவற்றோருக்கு உதவி.. விஜய் ரசிகர்களான புதுமண தம்பதிக்கு பாராட்டு 

திருமணம் நடந்த கையோடு சாலையோரத்தில் வசிக்கும் குடும்பங்கள், ஆதரவற்றோருக்கு விஜய் ரசிகர்களான புதுமண தம்பதி, நிவாரணப் பொருட்களை வழங்கினர்.கொரோனா ஊரடங்கினால் ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் திருமணம் நடந்து வருகின்றன. ஆடம்பரமாக திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக ஒதுக்கிய தொகையை, ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மாரியம்மன் கோவிலில் நாகராஜன் தமிழ் - பாண்டி மீனா இருவரும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் குடும்பங்கள், ஆதரவற்றோருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், பழங்கள், உணவு பொட்டலம் ஆகியவற்றை அளித்தனர். முன்னதாக அந்த பகுதிக்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்தும், மேளத்துடன் நடனமாடியும் சாலையோர மக்கள் வரவேற்றனர். இந்த புதுமண தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

 

Next Story

மேலும் செய்திகள்