மேட்டூர் அணை 12-ம் தேதி திறப்பு - 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிவு

வரும் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிந்துள்ளது
மேட்டூர் அணை 12-ம் தேதி திறப்பு - 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிவு
x
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து இருக்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர் வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால்,நீர்மட்டம் மெல்ல குறைந்து வருகிறது என்றும், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 973 கன அடியில் இருந்த, இன்று காலை 671 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாகவும், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 புள்ளி 2 அடியாக இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Next Story

மேலும் செய்திகள்