தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - காய், பழ சந்தை நேரம் மாற்றியமைப்பு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, மதுரை மாட்டுத்தாவணியில் பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்கள் தனித்தனியாக இயங்க, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
x
மதுரை மாட்டுத்தாவணியில், காய் மற்றும் பழச் சந்தைகள், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எனவே, நேரத்தை மாற்றியமைக்க கோரி, கடந்த ஒன்றாம் தேதி தந்தி தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பானது. இதனை கருத்தில் கொண்ட மாநகராட்சி நிர்வாகம் நேரத்தை, மாற்றி அமைத்துள்ளது. அதன் படி,  பழ மார்க்கெட்டிற்க்கு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காய்கறி மார்க்கெட்டிற்க்கு நேரத்தினை ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்