பிளஸ் 2 தேர்வு குறித்து இறுதி முடிவு - 2 நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படுமென பள்ளிக்கலவித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். இதற்காக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்