எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்

தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்
x
தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வந்தாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் எழுதியதாகவும்,  குறிப்பிட்டுள்ளார். மேலும்,  எந்த வகையிலும் தன் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கலாம் என 2006ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை குறிப்பிட்டுள்ள இறையன்பு, அரசு விழாக்களில் தன்னை மகிழ்விப்பதாக எண்ணி, அரசு அலுவலர்கள் யாரும் தான் எழுதிய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக வாங்கித் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும் எனவும், சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது எனவும் அறிவுறுத்தியுள்ள இறையன்பு, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்