நோயாளிகளுக்கு ஆறுதலாக கொரோனா சிகிச்சை மையத்தில் இசை கச்சேரி.. பாடல் பாடி அசத்தும் இசைக் கலைஞர்

தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் இசைக் கலைஞர் ஒருவர், அங்கு இசை கச்சேரி நடத்தி வருகிறார்.தஞ்சாவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பிராங்கிளின் என்பவர், இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்.
நோயாளிகளுக்கு ஆறுதலாக கொரோனா சிகிச்சை மையத்தில் இசை கச்சேரி.. பாடல் பாடி அசத்தும் இசைக் கலைஞர்
x
தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் இசைக் கலைஞர் ஒருவர், அங்கு இசை கச்சேரி நடத்தி வருகிறார்.தஞ்சாவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பிராங்கிளின் என்பவர், இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இசை நிகழ்ச்சிகள் இல்லாத நாள்களில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் பிராங்கிளின், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் வாரம் ஒருமுறை இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதன்படி, கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் நேற்று இரவு கச்சேரி நடத்தினார். இந்த நிகழ்ச்சியை சிகிச்சை பெற்று வரும் ஏராளமானோர் கண்டுகளித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மனதளவில் ஆறுதல் பெற இசை நிகழ்ச்சி விளங்குவதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்