கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
x
கொரோனா விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், சென்னை தலைமை செயலகத்தில இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தமிழகம் இதுவரை சந்தித்திராத இக்கட்டான சூழலில் தமிழக மக்களை காப்பாற்றும் பொறுப்பு இந்த அரசிற்கு உள்ளது என்றார். ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் போதுமான அளவு கிடைப்பதை அனைத்து மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றார். 
கொரோனா விவகாரத்தில், பொய்யுரையையும், புகழுரையையும், கேட்க விரும்பவில்லை என்றும் உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்